வெள்ளி, 7 மார்ச், 2014

தெகிடி - திரைப்பட விமர்சனம்




நேற்று தெகிடி திரைப்படம் பார்த்தேன். திகட்டவில்லை. படத்தில் கதை தான் ஹீரோ. என்ன ஆச்சர்யம்? தமிழ் சினிமா நல்ல  பாதையில் தான் போய்க்கொண்டிருக்கிறது,

சத்தம் போடும் ஆரவாரமான வில்லன் எவரும் இல்லை. குத்துப் பாட்டு. ஹ்ம்ம். மூச். கிடையவே கிடையாது. காமெடி ட்ராக் என்ற பெயரில் போர் அடிக்கின்ற அறுவைகள் கிடையாது.  எல்லாக் கதாபாத்திரங்களும் கதையோடு  பின்னப்பட்டு, நம்மோடு ஆனந்தமாக உறவாடுகின்றனர்.


Heroism  செய்யாத அமைதியான Hero. ஓவர் ஆக்க்ஷன் என்ற பெயரில்,  முறைப்பது, விரலை சொடுக்குவது, தரையில் உருள்வது, வீர வசனங்கள் பேசுவது, எதுவுமே கிடையாது. அப்போ உப்பு சப்பில்லாமல் இருக்குமா என்று நினைக்காதீர்கள். இது ஒரு " edge of  the  seat " thriller. படம் ஓடும் நேரம் தெரியவே இல்லை.

கதை , நம் எல்லோருக்கும் தெரிந்த சாதாரண பாலிசி மேட்டர் தான். ஆனால் கையாண்ட விதம் அருமை. இது போன்ற தமிழ் படங்களை நாம் தொடர்ந்து  பார்த்தால் , நம் சராசரி ஹீரோக்கள் கோபித்து கொள்ளவார்கள். அவர்களுக்கு இதில் வேலையே இருக்காது.

இந்த பின்னணியில் படம் எடுத்தால் கோலிவுட்,  ஹாலிவுட்டை தொடும் நாட்கள் விரைவில் வரும். படத்தில் நடித்தவர்களுக்கும், தயாரித்தவருக்கும், இசை அமைப்பாளருக்கும் வாழ்த்துக்கள்.