வெள்ளி, 7 மார்ச், 2014

தெகிடி - திரைப்பட விமர்சனம்




நேற்று தெகிடி திரைப்படம் பார்த்தேன். திகட்டவில்லை. படத்தில் கதை தான் ஹீரோ. என்ன ஆச்சர்யம்? தமிழ் சினிமா நல்ல  பாதையில் தான் போய்க்கொண்டிருக்கிறது,

சத்தம் போடும் ஆரவாரமான வில்லன் எவரும் இல்லை. குத்துப் பாட்டு. ஹ்ம்ம். மூச். கிடையவே கிடையாது. காமெடி ட்ராக் என்ற பெயரில் போர் அடிக்கின்ற அறுவைகள் கிடையாது.  எல்லாக் கதாபாத்திரங்களும் கதையோடு  பின்னப்பட்டு, நம்மோடு ஆனந்தமாக உறவாடுகின்றனர்.


Heroism  செய்யாத அமைதியான Hero. ஓவர் ஆக்க்ஷன் என்ற பெயரில்,  முறைப்பது, விரலை சொடுக்குவது, தரையில் உருள்வது, வீர வசனங்கள் பேசுவது, எதுவுமே கிடையாது. அப்போ உப்பு சப்பில்லாமல் இருக்குமா என்று நினைக்காதீர்கள். இது ஒரு " edge of  the  seat " thriller. படம் ஓடும் நேரம் தெரியவே இல்லை.

கதை , நம் எல்லோருக்கும் தெரிந்த சாதாரண பாலிசி மேட்டர் தான். ஆனால் கையாண்ட விதம் அருமை. இது போன்ற தமிழ் படங்களை நாம் தொடர்ந்து  பார்த்தால் , நம் சராசரி ஹீரோக்கள் கோபித்து கொள்ளவார்கள். அவர்களுக்கு இதில் வேலையே இருக்காது.

இந்த பின்னணியில் படம் எடுத்தால் கோலிவுட்,  ஹாலிவுட்டை தொடும் நாட்கள் விரைவில் வரும். படத்தில் நடித்தவர்களுக்கும், தயாரித்தவருக்கும், இசை அமைப்பாளருக்கும் வாழ்த்துக்கள்.






புதன், 26 பிப்ரவரி, 2014

எங்கே சாவி ?

ஒரு புகழ் பெற்ற மனோதத்துவ டாக்டரிடம் சென்றான் ஒரு 27 வயது மாணவன். டாக்டர், நான் இன்று இருக்கும் இந்த நிலமைக்கு காரணம் என் அம்மா தான் டாக்டர்.

அப்படியாப்பா. வெரி குட் . எவ்வளவு பெருமையா இருக்கு. உன் அம்மாவைப் பத்தி  நெனச்சு நான் சந்தோஷப்படறேன்.

இல்ல டாக்டர். நான் எவ்வளவு சொல்லியும் எனக்கு பிடிக்காத காலேஜ்ல சீட்  வாங்கிக் கொடுத்து, பிடிக்காத B.Sc பாடத்தை எடுத்துப் படிக்கச் சொன்னாங்க. எனக்கு பிடிக்காத பைக்க வாங்கிக் கொடுத்து, தினமும் காலேஜுக்கு  போ சொல்றாங்க.

கொஞ்சம் பொறுப்பா. Wait . இப்போ நான் ஒண்ணு சொல்லப் போறேன். உனக்கு பிடிக்காத பல விஷயங்கள உன் அம்மா செஞ்சிட்டாங்க. அதனால, நீ அவுங்கள போய் கூட்டிட்டு வா. அவுங்களுக்கு treatment  பண்ணப் போறேன். அப்போ தான் நீ சீக்கிரம் குணமாவே !.

நம்மில் பல பேர் இந்த மாதிரி தான் இருக்கோம். எல்லாத் தப்புகளுமே, பக்கத்துக்கு வீட்டுக்காரன் செய்து விட்ட மாதிரி, நம் வீட்டுச் சாவியை ரோடில் தொலைத்து விட்டு, நடு ஹாலில் தேடிக் கொண்டிருக்கிறோம். 

திங்கள், 24 பிப்ரவரி, 2014

நினைத்தேன், வந்தாய்


மஞ்சள் நிற போலோ கார் நமக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த காரை வாங்க ஒரு வாரமாக மனதுக்குள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு வாரத்திற்கு பிறகு எங்கே சென்றாலும் அந்த கார் நம்மை துரத்துகிறது. கடை வீதியில் சென்று நம் பழைய காரை நிறுத்தி விட்டுப் பார்த்தால் பக்கத்தில் மஞ்சள் நிற போலோ கார் ஒய்யாரமாக நின்று கொண்டிருக்கிறது. சரி, அன்று மாலை உங்களை விருந்திற்கே கூப்பிடாத மாமா ஆசையோடு, குடும்பத்துடன் வரச் சொல்லி கூப்பிடுகிறார். நீங்களும் உங்கள் மனைவியை சரி செய்து சாக்குப்போக்கு சொல்லி, அங்கு அழைத்துப் போகிறீர்கள். என்ன ஆச்சரியம்?

"தம்பி, நேத்திக்குத்தான் இந்த போலோ காரை வாங்கினேன்" என்று கூறிகொண்டே உங்களை வாசலுக்கு வந்து உங்கள் மாமா உள்ளே அழைத்துச் செல்கிறார். அங்கேயும் போலோ கார். நீங்கள் இந்தக் காரை வாங்க வேண்டும் என்று தீர்மானித்த பிறகு எங்க பார்த்தாலும் இந்த கார் தான்.

இதில் இருந்து என்ன  தெரிகிறது? மஞ்சள் நிற போலோ கார்கள் அதிக அளவில் தயாரிக்க ஆரம்பித்து விட்டர்களா ?  ஹா ஹா . அப்படி எல்லாம் இல்லை. பயந்து விடாதீர்கள்.

உங்கள் எண்ண அலைகள் அந்த காரைச்  சுற்றியே இருந்து வருகிறது. நம் அலைகளுக்கு ஏற்ப , நாம் காணும் காட்சிகள் ஒன்றிபோகின்றன. கையில் காசிருக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். கார் ஷோரூமுக்கு சென்று அந்தக் காரில் உட்காருங்கள். leather seat 'ல் உள்ள வாசனையை நுகர்ந்து  பாருங்கள். அந்த இன்பமான அனுபவத்தை மனதில் அடிக்கடி flashback 'ல் ஓட விடுங்கள். மனதில் பதியும் இந்தக் காட்சி நாளடைவில், அந்த கார் உங்கள் வீட்டு  வாசலில் வந்து நிற்கும் படி செய்து விடும். இது ஒன்றும் கட்டுக் கதை இல்லை. முயன்று பாருங்கள். நடக்கும்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

வாழ்த்துக்கள்



Dr. JS.ராஜ்குமார் அவர்களுக்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.











கத்தி வைத்திருப்போரில் மிக நல்லவன் நீ.
பாடிக் கொண்டே பல அறுவை சிகிச்சை செய்பவன் நீ.

வேரென சித்ரகலா இருக்க, வேறென்ன வேண்டும் உனக்கு?
உனது சேவையில் பல அதிசயங்கள் காத்திருக்கு நமக்கு.

தொட்டால் பூ மலரும் என்பது பழைய பாட்டு.
இன்று, புயலிலும் பூவை காப்பாற்றுவாய் உன் கை தொட்டு.
பிறந்த நாள் காணும் உனக்கு  கிடைக்கட்டும் நிறைய பாராட்டு.

textbooks and facebook

இந்தியாவில், ரொட்டித்  துண்டுகளைத்  தயார் செய்வது போல , கல்லூரிகளில் இருந்தும் பள்ளிகளில் இருந்தும் மாணவர்களை  நாம் தயார் செய்து வெளியே அனுப்பிக் கொண்டு இருக்கிறோம். எண்ணற்ற பள்ளிகள், கல்லூரிகள். இதில் பாடம் நடத்துவதை ஒரு சித்திரவதையாக, நினைத்துக் கொண்டு, கிடைத்த 45 அல்லது 60 மணித்துளிகளுக்குள் , தனக்கு தெரிந்த சரக்கை ஏனோ தானோ என்று சொல்லிக் கொடுத்து விட்டு தப்பிச் செல்கின்றனர், பல ஆசிரியர்கள். தப்பு அவர்கள் பேரில் இல்லை.

இன்றைய மாணவனுக்கு நிறைய திசைதிருப்புதல்கள் உள்ளன. வாரத்திற்கு நான்கு தமிழ் சினிமாக்கள் வருகிறது. இதில் எதைப் பார்ப்பது, எதை விடுவது  என்று அவனுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. நேரம் போதவில்லை. அரசாங்கம், வாரத்திற்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறையாக விட்டால் தவிர இதற்கு, தீர்வு கிடைக்காது. பிறகு இருக்கவே இருக்கு facebook, twitter, instagram இத்யாதி, இத்யாதி. ஒவ்வொரு நாளைக்கும்  ஒரு புதிய app வந்து அவனை பாடாப் படுத்துது. இது விஞ்ஞான வளர்ச்சி. அதையும் குற்றம் சொல்ல முடியாது நம்மால். பிறகு எங்க தான் பிரச்சினை?

பாடங்களை சுவாரசியமாக நடத்துவது எப்படி? இங்க தான் விஷயமே இருக்கு. இது தான் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய செய்தி. இருபது வருடங்களுக்கு முன்னால் இருந்த ஆசிரியர்களின் சொல்லிக் கொடுக்கும் திறமை, இன்றைய காலக்கட்டத்தை விட உயர்வாக  இருந்தது. இன்றைக்கு இருக்கும் ஆசிரியர்கள் நன்கு படித்தவர்கள் தான். ஆனால் மாணவனிடம் இருக்கும் கவனச் சிதறல்களை மீறி, அவனை கட்டிப் போட்ட மாதிரி, ஒரே இடத்தில் வைத்திருக்கும் மாதிரி, அவர்களால் பாடம் நடத்த முடியவில்லை. பாடங்கள் ஏன் டல்லடிக்கிரது?

"Practical knowledge" என்பது நம் மாணவர்கள் அனைவருக்கும் மிகக் குறைவு. எல்லாமே theory  தான். Science  பாடங்கள் சுத்த அ்றுவையாக மாற இதுவும் ஒரு காரணம். "visual  method" முறையில் பாடங்கள் நடத்தப்படவில்லை. பொறியியல் மாணவர்களில்  "கார் என்ஜின்" பற்றி படிப்பவர்களுக்கு வெறும் காகிதத்திலேயே எத்தனை நாளைக்கு என்ஜினை காமித்துக் கொண்டே இருக்க முடியும். "workshop" என்ற பேரில் ஆதி காலத்து மெஷின்களை காமித்து நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறோம்.

இந்திய மாணவன் உலக ரீதியில் பல நாடுகளில் சக்கை போடு போடுகிறான். எல்லாம் "desk work" வேலைகளில். ஒரு பொருள் எவ்வாறு உருவாகிறது? எதற்கு உருவாகிறது? யாரிடம் பொய் சேருகிறது, என்று கேட்டால், அவனிடம் பதில் கிடைக்காது. சுயமாக சிந்தித்து, கல்லூரி அறிவை கொஞ்ச நேரம் மறந்து விட்டு, சொந்தமாக சிந்திக்கும் வெகு சில மாணவர்களுக்கே, இந்த பதில்கள் தெரியும்.

இன்னும் நிறைய பேசலாம்....




சனி, 15 பிப்ரவரி, 2014

arangetram

இந்தியா 2014'ல் தேர்தலுக்காக தயாராகிக்கொண்டிருக்கிறது. ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டும் வசை பாடிக்கொண்டும்  இருக்கின்றனர் பல அரசியல்வாதிகள். இந்த தருணத்தில், எனது முதல் தமிழ் வலைப்பதிவை, எழுதி, பதிவு செய்ய இருக்கின்றேன்.

ஆங்கிலத்தில், allthreeaces.com  என்ற வலைப்பதிவை எட்டு மாத காலமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழ் வலைப்பதிவை ஆரம்பிக்கவேண்டும் என்ற எனது நெடு நாள் ஆசை இன்று நிறைவேறியது.

தொலைக்காட்சியை போட்டவுடன், சதுர வட்டங்களுக்குள்ளே பல கட்சிகளின் செய்தித்  தொடர்பாளர்கள் ஆர்ணப் கோஸ்வாமியின் கேள்விக் கணைகளில் சிக்கித் தவிப்பதைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது. தினமும் இரவு ஒன்பது மணிக்கு நடக்கும் இந்த பேச்சுக்களில் இந்திய வாக்காளன் என்பவன் எங்கிருக்கிறான் என்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

கூட்டணி சேர்ப்பதிலும், பேரம் பேசுவதிலும் நேரத்தை செலவிடாமல், நாட்டை திசை திருப்பும் தொலைநோக்குப் பார்வையை வளர்த்துக் கொண்டால் நிச்சயமாக இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை நமக்கு. கம்போடியா போன்ற சிறிய நாடுகள் கூட சுற்றுலாவை வைத்து அந்நிய செலாவணியை பல மடங்காக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்தியா என்ன சாதாரண நாடா ? ஒவ்வொரு மாநிலத்திலும் சுற்றுலாவை முன் வைத்து பல கோடி ரூபாய் ஈட்ட பல சந்தர்ப்பங்கள் இருக்கு. சில மாநிலங்கள் அதை செய்து வருகின்றனர். பல மாநிலங்கள் தங்களுக்குள் இருக்கும் பொக்கிஷங்கள் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு வேடிக்கையான செய்தி என்னவென்றால் , எல்லாப்  பிரச்சினைகளுக்கும் நாட்டின் முதல் அமைச்சரோ அல்லது பிரதம மந்திரியோ , தீர்வு சொல்லுவார்கள் என்று இந்திய வாக்காளன் கையைக் கட்டிக்கொண்டு இருக்கிறான். அவனுடைய நோக்கு என்பது , " அவன் வீடு, அவன் மக்கள், அவன் கார், அவன் மோட்டார் சைக்கிள், அவன் காபி-டிபன்" என்ற சிறிய  வட்டத்துக்குள்ளே சுற்றிக்கொண்டு இருக்கிறது . மழை பெய்யாவிட்டாலும் , மின்சாரம் இல்லாவிட்டாலும் , சாலைகள் பழுது பட்டாலும், எல்லாவற்றிற்கும் அரசியல் வாதி தான் காரணம் என்று சொல்லிவிட்டு எளிதில் அவர்கள் மீது கையை காட்டி விட்டு , போய் விடுகிறான். இந்த அணுகுமுறை மாற வேண்டும்.

மாற்றங்கள் வரும். நன்றி.