திங்கள், 24 பிப்ரவரி, 2014

நினைத்தேன், வந்தாய்


மஞ்சள் நிற போலோ கார் நமக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த காரை வாங்க ஒரு வாரமாக மனதுக்குள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு வாரத்திற்கு பிறகு எங்கே சென்றாலும் அந்த கார் நம்மை துரத்துகிறது. கடை வீதியில் சென்று நம் பழைய காரை நிறுத்தி விட்டுப் பார்த்தால் பக்கத்தில் மஞ்சள் நிற போலோ கார் ஒய்யாரமாக நின்று கொண்டிருக்கிறது. சரி, அன்று மாலை உங்களை விருந்திற்கே கூப்பிடாத மாமா ஆசையோடு, குடும்பத்துடன் வரச் சொல்லி கூப்பிடுகிறார். நீங்களும் உங்கள் மனைவியை சரி செய்து சாக்குப்போக்கு சொல்லி, அங்கு அழைத்துப் போகிறீர்கள். என்ன ஆச்சரியம்?

"தம்பி, நேத்திக்குத்தான் இந்த போலோ காரை வாங்கினேன்" என்று கூறிகொண்டே உங்களை வாசலுக்கு வந்து உங்கள் மாமா உள்ளே அழைத்துச் செல்கிறார். அங்கேயும் போலோ கார். நீங்கள் இந்தக் காரை வாங்க வேண்டும் என்று தீர்மானித்த பிறகு எங்க பார்த்தாலும் இந்த கார் தான்.

இதில் இருந்து என்ன  தெரிகிறது? மஞ்சள் நிற போலோ கார்கள் அதிக அளவில் தயாரிக்க ஆரம்பித்து விட்டர்களா ?  ஹா ஹா . அப்படி எல்லாம் இல்லை. பயந்து விடாதீர்கள்.

உங்கள் எண்ண அலைகள் அந்த காரைச்  சுற்றியே இருந்து வருகிறது. நம் அலைகளுக்கு ஏற்ப , நாம் காணும் காட்சிகள் ஒன்றிபோகின்றன. கையில் காசிருக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். கார் ஷோரூமுக்கு சென்று அந்தக் காரில் உட்காருங்கள். leather seat 'ல் உள்ள வாசனையை நுகர்ந்து  பாருங்கள். அந்த இன்பமான அனுபவத்தை மனதில் அடிக்கடி flashback 'ல் ஓட விடுங்கள். மனதில் பதியும் இந்தக் காட்சி நாளடைவில், அந்த கார் உங்கள் வீட்டு  வாசலில் வந்து நிற்கும் படி செய்து விடும். இது ஒன்றும் கட்டுக் கதை இல்லை. முயன்று பாருங்கள். நடக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக