சனி, 15 பிப்ரவரி, 2014

arangetram

இந்தியா 2014'ல் தேர்தலுக்காக தயாராகிக்கொண்டிருக்கிறது. ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டும் வசை பாடிக்கொண்டும்  இருக்கின்றனர் பல அரசியல்வாதிகள். இந்த தருணத்தில், எனது முதல் தமிழ் வலைப்பதிவை, எழுதி, பதிவு செய்ய இருக்கின்றேன்.

ஆங்கிலத்தில், allthreeaces.com  என்ற வலைப்பதிவை எட்டு மாத காலமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழ் வலைப்பதிவை ஆரம்பிக்கவேண்டும் என்ற எனது நெடு நாள் ஆசை இன்று நிறைவேறியது.

தொலைக்காட்சியை போட்டவுடன், சதுர வட்டங்களுக்குள்ளே பல கட்சிகளின் செய்தித்  தொடர்பாளர்கள் ஆர்ணப் கோஸ்வாமியின் கேள்விக் கணைகளில் சிக்கித் தவிப்பதைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது. தினமும் இரவு ஒன்பது மணிக்கு நடக்கும் இந்த பேச்சுக்களில் இந்திய வாக்காளன் என்பவன் எங்கிருக்கிறான் என்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

கூட்டணி சேர்ப்பதிலும், பேரம் பேசுவதிலும் நேரத்தை செலவிடாமல், நாட்டை திசை திருப்பும் தொலைநோக்குப் பார்வையை வளர்த்துக் கொண்டால் நிச்சயமாக இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை நமக்கு. கம்போடியா போன்ற சிறிய நாடுகள் கூட சுற்றுலாவை வைத்து அந்நிய செலாவணியை பல மடங்காக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்தியா என்ன சாதாரண நாடா ? ஒவ்வொரு மாநிலத்திலும் சுற்றுலாவை முன் வைத்து பல கோடி ரூபாய் ஈட்ட பல சந்தர்ப்பங்கள் இருக்கு. சில மாநிலங்கள் அதை செய்து வருகின்றனர். பல மாநிலங்கள் தங்களுக்குள் இருக்கும் பொக்கிஷங்கள் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு வேடிக்கையான செய்தி என்னவென்றால் , எல்லாப்  பிரச்சினைகளுக்கும் நாட்டின் முதல் அமைச்சரோ அல்லது பிரதம மந்திரியோ , தீர்வு சொல்லுவார்கள் என்று இந்திய வாக்காளன் கையைக் கட்டிக்கொண்டு இருக்கிறான். அவனுடைய நோக்கு என்பது , " அவன் வீடு, அவன் மக்கள், அவன் கார், அவன் மோட்டார் சைக்கிள், அவன் காபி-டிபன்" என்ற சிறிய  வட்டத்துக்குள்ளே சுற்றிக்கொண்டு இருக்கிறது . மழை பெய்யாவிட்டாலும் , மின்சாரம் இல்லாவிட்டாலும் , சாலைகள் பழுது பட்டாலும், எல்லாவற்றிற்கும் அரசியல் வாதி தான் காரணம் என்று சொல்லிவிட்டு எளிதில் அவர்கள் மீது கையை காட்டி விட்டு , போய் விடுகிறான். இந்த அணுகுமுறை மாற வேண்டும்.

மாற்றங்கள் வரும். நன்றி.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக