சத்தம் போடும் ஆரவாரமான வில்லன் எவரும் இல்லை. குத்துப் பாட்டு. ஹ்ம்ம். மூச். கிடையவே கிடையாது. காமெடி ட்ராக் என்ற பெயரில் போர் அடிக்கின்ற அறுவைகள் கிடையாது. எல்லாக் கதாபாத்திரங்களும் கதையோடு பின்னப்பட்டு, நம்மோடு ஆனந்தமாக உறவாடுகின்றனர்.
கதை , நம் எல்லோருக்கும் தெரிந்த சாதாரண பாலிசி மேட்டர் தான். ஆனால் கையாண்ட விதம் அருமை. இது போன்ற தமிழ் படங்களை நாம் தொடர்ந்து பார்த்தால் , நம் சராசரி ஹீரோக்கள் கோபித்து கொள்ளவார்கள். அவர்களுக்கு இதில் வேலையே இருக்காது.
இந்த பின்னணியில் படம் எடுத்தால் கோலிவுட், ஹாலிவுட்டை தொடும் நாட்கள் விரைவில் வரும். படத்தில் நடித்தவர்களுக்கும், தயாரித்தவருக்கும், இசை அமைப்பாளருக்கும் வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக