இந்தியாவில், ரொட்டித் துண்டுகளைத் தயார் செய்வது போல , கல்லூரிகளில் இருந்தும் பள்ளிகளில் இருந்தும் மாணவர்களை நாம் தயார் செய்து வெளியே அனுப்பிக் கொண்டு இருக்கிறோம். எண்ணற்ற பள்ளிகள், கல்லூரிகள். இதில் பாடம் நடத்துவதை ஒரு சித்திரவதையாக, நினைத்துக் கொண்டு, கிடைத்த 45 அல்லது 60 மணித்துளிகளுக்குள் , தனக்கு தெரிந்த சரக்கை ஏனோ தானோ என்று சொல்லிக் கொடுத்து விட்டு தப்பிச் செல்கின்றனர், பல ஆசிரியர்கள். தப்பு அவர்கள் பேரில் இல்லை.
இன்றைய மாணவனுக்கு நிறைய திசைதிருப்புதல்கள் உள்ளன. வாரத்திற்கு நான்கு தமிழ் சினிமாக்கள் வருகிறது. இதில் எதைப் பார்ப்பது, எதை விடுவது என்று அவனுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. நேரம் போதவில்லை. அரசாங்கம், வாரத்திற்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறையாக விட்டால் தவிர இதற்கு, தீர்வு கிடைக்காது. பிறகு இருக்கவே இருக்கு facebook, twitter, instagram இத்யாதி, இத்யாதி. ஒவ்வொரு நாளைக்கும் ஒரு புதிய app வந்து அவனை பாடாப் படுத்துது. இது விஞ்ஞான வளர்ச்சி. அதையும் குற்றம் சொல்ல முடியாது நம்மால். பிறகு எங்க தான் பிரச்சினை?
பாடங்களை சுவாரசியமாக நடத்துவது எப்படி? இங்க தான் விஷயமே இருக்கு. இது தான் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய செய்தி. இருபது வருடங்களுக்கு முன்னால் இருந்த ஆசிரியர்களின் சொல்லிக் கொடுக்கும் திறமை, இன்றைய காலக்கட்டத்தை விட உயர்வாக இருந்தது. இன்றைக்கு இருக்கும் ஆசிரியர்கள் நன்கு படித்தவர்கள் தான். ஆனால் மாணவனிடம் இருக்கும் கவனச் சிதறல்களை மீறி, அவனை கட்டிப் போட்ட மாதிரி, ஒரே இடத்தில் வைத்திருக்கும் மாதிரி, அவர்களால் பாடம் நடத்த முடியவில்லை. பாடங்கள் ஏன் டல்லடிக்கிரது?
"Practical knowledge" என்பது நம் மாணவர்கள் அனைவருக்கும் மிகக் குறைவு. எல்லாமே theory தான். Science பாடங்கள் சுத்த அ்றுவையாக மாற இதுவும் ஒரு காரணம். "visual method" முறையில் பாடங்கள் நடத்தப்படவில்லை. பொறியியல் மாணவர்களில் "கார் என்ஜின்" பற்றி படிப்பவர்களுக்கு வெறும் காகிதத்திலேயே எத்தனை நாளைக்கு என்ஜினை காமித்துக் கொண்டே இருக்க முடியும். "workshop" என்ற பேரில் ஆதி காலத்து மெஷின்களை காமித்து நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறோம்.
இந்திய மாணவன் உலக ரீதியில் பல நாடுகளில் சக்கை போடு போடுகிறான். எல்லாம் "desk work" வேலைகளில். ஒரு பொருள் எவ்வாறு உருவாகிறது? எதற்கு உருவாகிறது? யாரிடம் பொய் சேருகிறது, என்று கேட்டால், அவனிடம் பதில் கிடைக்காது. சுயமாக சிந்தித்து, கல்லூரி அறிவை கொஞ்ச நேரம் மறந்து விட்டு, சொந்தமாக சிந்திக்கும் வெகு சில மாணவர்களுக்கே, இந்த பதில்கள் தெரியும்.
இன்னும் நிறைய பேசலாம்....